சூப்பர் சிங்கர் பாடகியின் ஆசை.. நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்!

Feb 22, 2024 - 22:49
Updated: 2 years ago
0 275
சூப்பர் சிங்கர் பாடகியின் ஆசை.. நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்!

சூப்பர் சிங்கர் பாடகி ஒருவரின் ஆசையை நடிகர் சிவகார்த்திகேயன் நிறைவேற்றியுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, அவர்களின் கனவுகளை நனவாக்கும் என்பதே நிதர்சனம். தமிழ்நாட்டை பொறுத்தவரை உலகத்தில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் திறமைக்கு மதிப்பளித்து அவர்களுக்கான அடையாளங்கள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு ஊடகமும் திறமைகளை தேடி அதற்கு தனி அங்கீகாரத்தை வழங்கி வருவது தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில், தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றான ஸ்டார் விஜய் நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளாக ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பல எளிய பின்னணி கொண்ட பாடகர்களை மெருகேற்றி தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது.

10 ஆண்டுகளாக வெற்றிகரமாக திறமைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பளித்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் 10 ஆவது சீசனில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆரம்ப கட்ட எபிஸோடு ஒன்றில் பங்கேற்ற, கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, நடிகர் சிவகார்த்திகேயனைச் சந்தித்து பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தற்போது இவர் தமிழில் எம்.ஏ.பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். நிகழ்ச்சியில் இவரின் குரலும் பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தது.

இவரின் ஆசையை நிகழ்ச்சி மூலம் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்தார். இதன் வீடியோ பதிவு, இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோவில், சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த தருணத்தை நம்ப முடியாத தன்ஷிரா, அவரை கண்ணீருடன் கட்டியணைத்துக் கொண்டார். அவருடன் உரையாடி மகிழ்வித்த சிவகார்த்திகேயன், இவர் என் சகோதரி  பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சியின் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்த காட்சிகள் அனைவரையும் உருக வைத்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User