யஷ் Fans-க்கு ஒரு Good News ! .... Toxic படத்தின் New Update !

டாக்ஸிக் படம் வருகின்ற 26 ஆம் தேதி உலகம் முழுவதும் களமிறங்க உள்ளதாகவும் அதன் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக இருப்பதாக அப்டேட் வந்துள்ளது. 

Aug 08, 2026 - 13:30
Updated: 10 days ago
0 208
யஷ் Fans-க்கு ஒரு Good News ! .... Toxic படத்தின் New Update !
toxic trailer release

கே.ஜி.எஃப் படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் யஷின் மாஸான நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7.01 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அப்டேட்டை அறிவித்துள்ளனர். நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதனைத் தொடர்ந்து டாக்ஸிக் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

1940 முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த அதிரடியான ஆக்ஷன் திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான டாக்ஸிக் டீசர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இடம்பெற்றது. அதில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைகளும் எழுந்ததால், டாக்ஸிக் டீசர் பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும், இந்த டீசர் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7.01 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, யஷின் மிரட்டலான நடிப்புடன் வெளியாக உள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் அதிரடியான டிரெய்லரை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User