ஐபிஎல் டிரேடிங்: ஹர்திக்கை விட்டுக் கொடுக்குமா மும்பை? 

ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் வெளியாகும் முன்பே, ஹர்திக் பாண்டியாவின் பெயர் வீரர்கள் பரிமாற்ற விவகாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

Aug 11, 2026 - 09:40
0 253
ஐபிஎல் டிரேடிங்: ஹர்திக்கை விட்டுக் கொடுக்குமா மும்பை? 

பாண்டியாவை விடுவிக்குமா மும்பை?

2024-ல் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய பிறகு பாண்டியாவின் தலைமையில் எதிர்பார்த்த அளவுக்கு அணியின் செயல்பாடு அமையவில்லை. கடந்த மூன்று சீசன்களில் மும்பை அணி ஒருமுறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 2026 சீசனில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது கடைசி இடத்தை பிடித்தது.

இதனால் பாண்டியாவை வேறு அணிக்கு அனுப்புவது குறித்து பேச்சு எழுந்துள்ளது. இருப்பினும், அவரை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. அதேசமயம், பாண்டியாவை பெற விரும்பும் சில அணிகளுடன் தொடர்புகள் நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாரை கேட்கிறது மும்பை?

பாண்டியாவை பரிமாற்றம் செய்யும் பட்சத்தில், அவருக்கு பதிலாக உயர்தர பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளரை பெற வேண்டும் என்பதே மும்பை அணியின் எதிர்பார்ப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் அக்சர் படேல் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்சர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுடன் கேப்டன்சி அனுபவத்தையும் கொண்டிருப்பதால், மும்பையின் அணிச்சேர்க்கைக்கு அவர் கூடுதல் பலமாக அமையலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் நிக்கோலஸ் பூரன் ஆகியோருடன் பாண்டியாவை பரிமாற்றம் செய்வது குறித்த பேச்சுகளும் அடிபடுகின்றன. ஆனால், இவை அனைத்தும் தற்போது சாத்தியக்கூறுகள் மட்டுமே; எந்த ஒப்பந்தமும் உறுதி செய்யப்படவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User