அனுபமாவின் காதல் தோல்வி... அந்த நடிகர் யார்?

நடிகை அனுபமா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது காதல் தோல்வி குறித்து பேசியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Aug 13, 2026 - 19:04
0 258
அனுபமாவின் காதல் தோல்வி... அந்த நடிகர் யார்?
Anupama Parameswaran

அனுபமா கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து தனது சொந்த உழைப்பால் சினிமாவுக்குள் நுழைந்து தமிழ் சினிமாவில் ‘பிரேமம்’, ‘கொடி’, ‘பைசன்’ போன்ற படங்களில் தனது நடிப்பின் மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக ‘பைசன்’ படத்திற்காகத் தூத்துக்குடியிலேயே 3 மாதங்கள் தங்கி உழைத்தவர் அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தின் மூலம் அவருடைய துல்லியமான நடிப்பிலும் எதார்த்தமான பேச்சியிலும் தமிழ் சினிமா ரசிகர்களை மத்தியில் தனி இடம் பிடித்தார்.

இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இளம் தமிழ் நடிகரும் காதலித்ததாகவும், பின்னர் பிரிந்ததாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், அனுபமா நேர்காணலில் இக்காதல் பிரிவை நோக்கிச் சென்றது குறித்து பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

முக்கியமாக, “நார்சிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.

நினைத்துப் பாருங்கள், ஒருநாள் அவர் ரெமோ. அப்படியொரு காதல்... நாம் மிகவும் கொடுத்து வைத்த ஆள் என்கிற அளவுக்கு கனவுகள் துளிர்க்கும். அடுத்த நாள், அந்நியனாகிவிடுவார்; மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும். பின், அம்பியாக மாறி அழுது, கெஞ்சி நம்மை சமாதானப்படுத்துவார். நடிகை மடோனா செபாஸ்டியன் தனது நார்சிஸ்ட் காதல் அனுபவங்கள் குறித்து பேசியபோதுதான், நாமும் இப்படியான சூழ்நிலையில்தான் இருக்கிறோம் என்பதை நினைத்து நடுங்கினேன்” எனக் கூறியிருந்தார்.

அனுபமாவின் இப்பேச்சைக் கேட்ட பலரும், அந்த நடிகர் இவ்வளவு மோசமானவரா? என்கிற ரீதியில் அவரைத் தாக்கிப் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அந்த நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருக்கும் புகைப்படங்களில், “நச்சுத்தன்மை வாய்ந்தவரா நீங்கள்?”, “உங்கள் தரப்பு குறித்தும் பேசுங்கள்” என விமர்சித்து வருகின்றனர்.

தகவல்களாக இருந்த காதல் விவகாரத்தை அனுபமா குற்றச்சாட்டுகளாக அடுக்கி தனது தரப்பை விளக்கியுள்ளதால், அந்த நடிகர் இதுகுறித்து ஏதாவது தெரிவிப்பாரா? என ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்புகின்றனர். அதேநேரம், அனுபமாவையும் சிலர் விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அனுபமா காதலித்த அந்த நடிகர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User