மண்குடம் சுமந்த ஹார்ட் பீட் நடிகை... வைரலாகும் வீடியோ!

ஹார்ட் பீட் இணையத் தொடரின் பிரபல நடிகை தீபா பாலு மண்குடம் சுமந்து தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aug 10, 2026 - 16:21
Updated: 8 days ago
0 188
மண்குடம் சுமந்த ஹார்ட் பீட் நடிகை... வைரலாகும் வீடியோ!
Deepa Balu

தமிழ்த் திரையுலகில் மருத்துவர் மற்றும் மாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், யூடியூப் தொடர்களில் நடித்து பிரபலமான நிலையில் தற்போது ஹார்ட் பீட் இணையத் தொடரில் ரீனா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

நிஜ வாழ்க்கையிலும் மருத்துவர் என்பதால், இத்தொடரில் இவரின் இயல்பான நடிப்பு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கொலைச்சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென்று 10 லட்சத்துக்கும் மேலான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள லால் தர்வாஜா கோயிலுக்குச் சென்ற தீபா பாலு, போனலு திருவிழாவில் பங்கேற்றார். இந்தக் கோயிலானது தெலங்கானா மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

இங்கு போனலு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும். ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள், தங்களின் தலைகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பானைகளில் போனம் (அரிசி, பால், வெல்லம் கலந்த பிரசாதம்) சுமந்து வந்து அம்மனுக்குச் செலுத்துவார்கள்.

நடிகை தீபா பாலு போனலு திருவிழாவில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User