உதவி பேராசிரியர்கள் தேர்வு : 4,000 பணியிடங்கள் - எப்போது விண்ணப்பிக்கலாம்?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் 569 தமிழ் உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Mar 14, 2024 - 13:59
0 165
உதவி பேராசிரியர்கள் தேர்வு : 4,000 பணியிடங்கள் - எப்போது விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கு மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் 569 தமிழ் உதவி பேராசிரியர்கள், 656 ஆங்கில உதவி பேராசிரியர்கள், 318 கணிதம் மற்றும் 296 வணிகவியல் உதவி பேராசிரியர்கள் உட்பட 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User