பாட்டிலும் கையுமாக மாட்டிய அரசு பள்ளி மாணவிகள்... வைரலான வீடியோ!

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி சீருடையில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 14, 2026 - 14:12
0 263
பாட்டிலும் கையுமாக மாட்டிய அரசு பள்ளி மாணவிகள்... வைரலான வீடியோ!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் "நீ குடிடி ஃபர்ஸ்ட், இல்ல நீ குடி, ஏண்டி வீடியோ எடுக்குற" என்று சீருடையில் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் இரண்டு மாணவிகள் மது அருந்தியதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவம் பள்ளியில் நடைபெறவில்லை என்றும், வீட்டில் வைத்து நடந்ததாகவும் அவர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ பள்ளி வளாகத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவந்ததை தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மாணவிகள் மது அருந்திய சம்பவம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கூறி, பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

வெளியான வீடியோவில், அந்த வீடியோவில் ஒரு மாணவி, மதுபானத்தை ஊற்றிக் கொடுத்து, இன்னொரு மாணவியிடம் குடி என சொல்வது போலவும், அதற்கு அந்த மாணவி "நீ குடிடி" என சொல்கிறார். அப்போது யாரோ ஒரு மாணவி வீடியோ எடுப்பதை அறிந்த மது குடிக்கும் மாணவிகள், "ஏன்டி வீடியோ எடுக்குறே" என கேட்கிறார்கள்.

இந்த பதிவில், ஒரு மாணவி மற்றொரு மாணவிக்கு மதுபானத்தை ஊற்றிக் கொடுப்பதும், குடிக்குமாறு கூறுவதும் பதிவாகியுள்ளது. மேலும், வீடியோ எடுக்கப்படுவதை அறிந்த மாணவிகள், அதை பதிவு செய்தவரிடம் கேள்வி எழுப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, இதே பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர்களுக்கு போதை சாக்லேட் வழங்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதற்கு முன்பும் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறையும், அரசும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகியிருப்பது கவலை அளிப்பதாகவும்,

பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் எளிதில் கிடைக்கும் சூழலை மாற்ற வேண்டும். இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரிப்பதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை படிப்படியாக குறைத்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தக்கலை பள்ளி மாணவிகள் தொடர்பான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User