தமிழகத்தில் மழை நீடிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jul 23, 2026 - 15:42
0 359
தமிழகத்தில் மழை நீடிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜூலை 24 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸும் பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User