19 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை... வானிலை ஆய்வு மையம் தகவல் !

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aug 12, 2026 - 21:12
0 334
19 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை... வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User