இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு... வானிலை அலர்ட் !

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Aug 10, 2026 - 17:44
0 280
இடி மின்னலுடன்  மழைக்கு வாய்ப்பு... வானிலை அலர்ட் !

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுவதால், இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.

12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 14-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 மற்றும் 16-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

வெப்பநிலை

அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். இதனிடையே, இன்று முதல் 14-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User