இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு...... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Aug 13, 2026 - 16:35
0 229
இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு...... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் நாளை முதல் ஆக.19 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும்,நீலகிரி,தேனி மாவட்டங்களில் நாளை கனமழையும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதியில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால் இதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஆகஸ்ட் 14 நீலகிரி,தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும பலத்த காற்றுடன் கூடிய கனம ழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து , மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆக.15 , 16,17 உள்ளிட்ட தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆக.18-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களிலும், ஆக.19-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User