புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில்  இன்று (ஆகஸ்ட் 12) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aug 12, 2026 - 12:11
0 974
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
TN WEATHER REPORT Aug 12

தமிழ்நாட்டில்  இன்று (ஆகஸ்ட் 12) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு.

நாளை (ஆகஸ்ட் 13) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 

வெப்பநிலையை பொறுத்தவரை, ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. வட உள் தமிழகத்தில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

இன்று, ஆகஸ்ட் 12-ஆம் தேதி குமரிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User