கமிஷனில் கல்லாக்கட்ட நினைக்கும் சீனியர் அமைச்சர்..? கோட்டை லீக்ஸ்..!

தவெக அரசு ஒரு கிளீன் அரசு என்ற பிம்பத்தை கட்ட நினைக்கும் முதலமைச்சர் விஜய்க்கு ஷாக் கொடுக்கும் விதமாக சீனியர் அமைச்சர் ஒருவர் கமிஷனை வைத்து கல்லாக்கட்ட டீலிங் பேசிக் கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கோட்டை வட்டாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. 

Jul 23, 2026 - 13:52
0 264
கமிஷனில் கல்லாக்கட்ட நினைக்கும் சீனியர் அமைச்சர்..? கோட்டை லீக்ஸ்..!

தவெக தலைவராக இருந்த விஜயை, இட்னு வந்து இட்னு போய் முதலமைச்சர் அரியணையில் ஏற்றிய அந்த சீனியர் அமைச்சர், ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து அதிகாரிகள் 10 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதில் தனக்கான தொகை சரியாக வந்து சேர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், பழைய நிலுவை பில்களைத் தீர்வு செய்வதற்காக 3 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதிலும் தனக்கான பங்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என அந்த அமைச்சர் உத்தரவிட்டதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், கமிஷன் தொடர்பான விவகாரங்களில் தனது பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அதிகாரிகளுக்கான தொகை என்ற வகையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்த சீனியர் அமைச்சர் கூறியதாகவும் தகவல் பரவி வருகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User