முதலமைச்சரின் தொகுதியில் இப்படியா? ரேஷன் அரிசி கடத்தல் பரபரப்பு!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jul 22, 2026 - 13:00
Updated: 27 days ago
0 277
முதலமைச்சரின் தொகுதியில் இப்படியா? ரேஷன் அரிசி கடத்தல் பரபரப்பு!

சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதி ஆகிய இரு தொகுதிகளிலும்  முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்து பெரம்பூர்  தொகுதியில் பொறுப்பேற்று கொண்டார். 

அதனைத் தொடர்ந்து தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் கடந்த ஜூலை 13 ஆம் தேதி   புதிதாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மின்னணு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து நியாயவிலைக் கடைக்கு நேரிலே சென்று பொருட்களின் தரம்,இருப்பு,மற்றும் விநியோக முறை குறித்து நேரில் ஆய்வு செய்தார். மேலும் அரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை முதலமைச்சர் விஜய் பயனாளிகளுக்கு வழங்கினார். 

இந்நிலையில் முதலமைச்சர் விஜயின் சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அரிசி நியாய விலைக்கடையிலிருந்து மூட்டை மூட்டையாக இருசக்கர வாகனங்களில் ஏற்றி பின்னர் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்ந்து கண்காணிப்பு, ஆய்வுகளை மேற்கொண்டு வந்தாலும், இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில், நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் முதலமைசசர் ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று தரக் கட்டுப்பாடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பொருட்களையும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வைத்து கடத்தக்கூடிய அந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User