கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்... ஹைலைட்டான திரிஷா!

முதலமைச்சர் விஜய் முதன் முதலில் சுதந்திர தின விழாவில் குடியேற்றுவது ஒரு பக்கம் பேசப்பட்டாலும் அதன் மறுபுறம் இந்நிகழ்வில் திரிஷா கலந்து கொண்டது தான் தற்போது வைரலாகி வருகிறது.

Aug 15, 2026 - 14:17
0 231
கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்... ஹைலைட்டான திரிஷா!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் முதன்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய நிகழ்வு கவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விழாவில் நடிகை திரிஷா தனது தாயாருடன் கலந்து கொண்டது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டின் 80-வது சுதந்திர தினமான இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய், சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழாவில் உரையாற்றினார்.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, முதலமைச்சராக விஜய் தனது முதல் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றியிருப்பது அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விழாவில் முதலமைச்சர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோருக்கு அருகில் நடிகை திரிஷா தனது தாயாருடன் அமர்ந்திருந்த காட்சிகள் வெளியாகின. இந்த வீடியோவை ஊடகங்கள் காலை முதலே மாறி மாறி ஒளிபரப்பி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களிலும் திரிஷா விழாவில் கலந்து கொண்டது தொடர்பான பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

எந்தவொரு பெற்றோருக்கும் பெருமையான தருணம் என்பது, தங்களது மகன் மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பதை காண்பதாகும். அதேபோல், அந்த மகன் மாநிலத்தின் சார்பில் சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நேரில் காண்பது அவர்களுக்கு வாழ்நாள் மகிழ்ச்சியாக அமையும். அந்த வகையில், முதலமைச்சர் விஜய் தனது பெற்றோரின் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் 1.72 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியமைத்ததும் சாதாரண விஷயம் அல்ல என்றும், திமுக, அதிமுக போன்ற வலுவான அரசியல் கட்சிகளை எதிர்கொண்டு விஜய் என்ற தனிநபரின் செல்வாக்கை மையமாகக் கொண்டு கிடைத்த வெற்றி என்றும் அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். வேட்பாளர்களைக் காட்டிலும் விஜய்யை நம்பி மக்கள் வாக்களித்ததாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகை திரிஷா தனது தாயாருடன் சுதந்திர தின விழாவில் பங்கேற்றதும், அவருக்கு முதல் வரிசையில் இடம் வழங்கப்பட்டதும் அதிகமாகப் பேசப்படுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திரிஷா விழாவில் பங்கேற்ற காட்சிகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். அதேபோல், திரிஷா விழாவில் பங்கேற்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் ஒளிபரப்பப்படுவதும் தேவையற்ற கவனத்தை ஏற்படுத்துவதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

ஒருபுறம் முதலமைச்சர் விஜய் முதன்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய வரலாற்று நிகழ்வு நடைபெற்றுள்ள நிலையில், மறுபுறம் நடிகை திரிஷாவின் வருகை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சை மேலும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அல்லது நடிகை திரிஷா ஆகியோரில் யாராவது ஒருவர் விளக்கம் அளித்தாலோ அல்லது கருத்து தெரிவித்தாலோ மட்டுமே தற்போது சமூக வலைத்தளங்களில் உருவாகியுள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User