தாயின் கண்முன்னே மகளை இழுத்து சென்ற சிறுத்தை… பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி!

கோவை மாவட்டம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் 6 வயது குழந்தையை தாய்யின் கண் முன்னே சிறுத்தை தாக்கி இழுத்து சென்று கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Oct 19, 2024 - 22:01
0 301
தாயின் கண்முன்னே மகளை இழுத்து சென்ற சிறுத்தை… பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் கோன்டா என்ற பகுதியில் இருந்து தேயிலை பறிக்கும் வேலைக்காக அனுல் அன்சாரி என்பவர், தனது இரண்டு மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வந்து வேலை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ஒருவர் இயற்கை மரணம் அடைந்த நிலையில் அனைவரும் வீட்டில் இருந்து உள்ளனர். அணுல் அன்சாரி மற்றும் நசிரென் காத்துன் மற்றும் 6 வயது குழந்தை அப்சரா காத்துன் தேயிலை தோட்டத்தில் நின்று உள்ளனர். அப்போது குழந்தையை சிறுத்தை தாக்கி இழுத்து சென்றது. 

இதை பார்த்த மக்கள் சிறுத்தையை விரட்டி சென்று உள்ளனர். அப்போது சிறுத்தை குழந்தையை தேயிலை தோட்டத்தில் விட்டு சென்றது. ஆனால் அதற்குள் குழந்தை இறந்துவிட்டது. இதை தொடர்ந்து, காவல் துறையினரும் நகராட்சி தலைவர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைபற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

6 வயது குழந்தையை தாய்யின் கண் முன்னே சிறுத்தை தாக்கி இழுத்து சென்று கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User