Raayan Release Date: ராயன் ரிலீஸ் தேதி கன்பார்ம்… விஜய்க்காக முடிவை மாற்றினாரா தனுஷ்..?

தனுஷின் 50வது படமான ராயன் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apr 05, 2024 - 16:06
0 289
Raayan Release Date: ராயன் ரிலீஸ் தேதி கன்பார்ம்… விஜய்க்காக முடிவை மாற்றினாரா தனுஷ்..?

சென்னை: பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ராயன். பவர் பாண்டியில் கேமியோ ரோலில் மட்டும் நடித்திருந்த தனுஷ், ராயன் படத்தில் ஹீரோவாக களமிறங்கிவிட்டார். அதுமட்டும் இல்லாமல் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், நித்யா மேனன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம் என பெரும் நட்சத்திரப் பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ராயன், தனுஷ் கேரியரில் இன்னொரு புதுபேட்டையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ், இன்னொரு பக்கம் ராயன் போஸ்ட் புரொடக்ஷனையும் முடித்துவிட்டாராம். இன்னும் ஒருசில வேலைகள் மட்டும் முடிந்துவிட்டால் ராயன் ஃபைனல் வெர்ஷன் ரெடியாகிவிடும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்தப் படம் சம்மரில் ரிலீஸாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் காரணமாக அதில் சில மாற்றங்கள் செய்துவிட்டாராம் தனுஷ்.  

அதன்படி ராயன் திரைப்படம் ஜூன் 7ம் தேதி ரிலீஸாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அவரது கோட் திரைப்படம் அதே மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோட் படத்துக்கு முன்னதாகவே ராயனை ரிலீஸ் செய்துவிடலாம் என தனுஷ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து ராயன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.  

முன்னதாக ஏப்ரல் 1ம் தேதி வெளியான ராயன் போஸ்டர் ரசிகர்களுக்கு செம ஹைப் கொடுத்திருந்தது. அதில்எந்த காம்போ ஸ்க்ரீன்ல பார்க்க மரண வெயிட்டிங்..?” என்ற கேப்ஷனுடன், தனுஷ்செல்வராகவன், தனுஷ்எஸ்ஜே சூர்யா, தனுஷ்காளிதாஸ், சந்தீப் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து விரைவில் ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User