GOAT: சர்ப்ரைஸ்ஸாக GOAT அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு… ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்!

விஜய்யின் கோட் படத்தில் இருந்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது வெங்கட் பிரபு வெளியிட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது.

Apr 03, 2024 - 16:11
Updated: 2 years ago
0 214
GOAT: சர்ப்ரைஸ்ஸாக GOAT அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு… ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய்வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இந்தப் படம், விஜய் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அஜித்துக்கு மங்காத்தா மூலம் மாஸ் காட்டிய வெங்கட் பிரபு, விஜய்க்கு எப்படி கெத்து காட்டப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் இசையில் சீக்கிரமே கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதனிடையே சர்ப்ரைஸ்ஸாக வெங்கட் பிரபு வெளியிட்ட போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனாலும் இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் உள்ளனர்.  

அதாவது டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபுதேவா, ஏற்கனவே விஜய்யுடன் பலமுறை கூட்டணி வைத்துள்ளார். விஜய்யின் பாடல்களுக்கு கோரியோகிராபி செய்தது மட்டுமில்லாமல், போக்கிரி, வில்லு ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடந்து தற்போது கோட் படத்தில் விஜய்யின் கேங்கில் ஒருவராக மாஸ் காட்டவுள்ளார்.  

இன்று பிரபுதேவா பிறந்தநாள் என்பதால், அவரது போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த போஸ்டரில் பிரபுதேவாவின் லுக் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. இருப்பினும் அவருடன் விஜய் இல்லாததால் தளபதியின் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் உள்ளனர். அதேநேரம் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து செம்மையான டான்ஸ் ட்ரீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது உண்மையான அப்டேட்டாக இருந்தால், பிரபுதேவாவின் பிறந்தநாளான இன்று கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User