சின்னம் கிடைக்காததற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… சீமானுக்கு அண்ணாமலை கேள்வி?

சின்னம் வேண்டும் என்றால் அவர் முதலில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

Mar 04, 2024 - 01:53
0 480
சின்னம் கிடைக்காததற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… சீமானுக்கு அண்ணாமலை கேள்வி?

செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசியதாவது, "நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக நான் எங்கும் சொல்லவில்லை. தேர்தலில் பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஒருங்கிணைப்பு பணியை மட்டுமே நான் மேற்கொள்கிறேன். பிரதமர் மோடி என்ன கட்டளையிட்டாலும் அதை நான் கேட்பேன்" எனத் தெரிவித்தார்.

 தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சின்னம் பறிபோக பாஜகவும், அண்ணாமலையும் தான் காரணம் என சீமான் குற்றஞ்சாட்டியது தொடர்பாகக் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "சின்னம் வேண்டும் என்றால் சீமான் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகச் சீமான் இருந்திருந்தால், அந்த சின்னம் அவருக்காக இருக்கும். ஆனால் அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் சின்னம் கிடைக்கவில்லை.

சீமானின் கையைப் பிடித்து நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என நான் கூறினேனா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், "முதலில் சீமான் உண்மையைத் தெரிந்து பேச வேண்டும்.முதலில் மோடியைத் திட்டுவார் தற்போது அண்ணாமலையைத் திட்ட ஆரம்பித்துள்ளார்" என  கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User