4 பேர் OUT... 6 பேர் IN..? அமைச்சரவையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்...?

தவெக அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 6 புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Aug 08, 2026 - 15:30
0 530
4 பேர் OUT... 6 பேர் IN..? அமைச்சரவையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்...?

தவெக அரசில் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் முதலமைச்சர் விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே சர்ச்சைகளில் சிக்கிய நான்கு அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சில அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ளவும், நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் விஜய் இந்த அதிரடி முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் இந்த அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த லிஸ்டில், சமூக நலன் மற்றும் மகளிர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், த.வெ.க. அமைச்சர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் என நான்கு பேர் இருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதோடு, பட்டியலில் அடுத்தகட்டமாக இருக்கும், அமைச்சர்கள் கீர்த்தனா, கமலி, ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) ஆகியோருக்கும் வார்னிங் கொடுக்கும் விதமாக இலாகாக்களை மாற்றவும் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

மேலும் இதன்மூலம், த.வெ.க. மற்றும் காங்கிரஸ் அதிருப்தி சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் கடந்தமுறை அமைச்சரவைப் பட்டியலில் கடைசி நேரத்தில் வாய்ப்பு மிஸ்ஸாகிப்போன மதுரை வடக்கு தொகுதியின் கல்லாணை, சிங்காநல்லூர் கிரிபிரசாத், ஈ.சி.ஆர். சரவணன், திருவொற்றியூர் செந்தில்குமார், உசிலம்பட்டி விஜய் மகாலிங்கம், முசிறி விக்னேஷ் மற்றும் கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் அமைச்சர் பட்டியல் பரிசீலனையில் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தவிர, அ.தி.மு.க.விலிருந்து வந்த விஜயபாஸ்கர்கள், மரகதம் குமரவேல் ஆகியோருக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு, வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User