”தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…” – ஜோதிகா அதிரடி..!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நடிகை ஜோதிகா போட்டுள்ள பதிவு  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Jul 25, 2026 - 10:38
0 259
”தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…” – ஜோதிகா அதிரடி..!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மாணவர்களுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் தான் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிகா, “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் நிற்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அபிஜீத் திப்கே மற்றும் சௌரவ் தாஸ் போன்றவர்களாக எங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறோம். தயக்கமின்றி, வெளிப்படையாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் Gen Z தலைமுறையை எண்ணி பெருமை கொள்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் குறித்து நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நடிகை ஜோதிகா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. மாணவர்களின் குரலைக் கேட்டு, அவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User