தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி... இன்று மீண்டும் விலை உயர்வு!

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Jul 20, 2026 - 11:17
0 349
தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி... இன்று மீண்டும் விலை உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற இறக்கம் சந்தித்து வருகிறது.

இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் (18.07.2026) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 35 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,135 க்கும், சவரனுக்கு ரூ 280 உயர்ந்து ஒரு சவரன் 1,05,080 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த வொரு மாற்றம் இல்லாமல் விற்பனையானது.

இந்நிலையில் வார தொடக்கத்திலே தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.அதன்படி கிராமுக்கு ரூ 15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 13,150 க்கும் ,சவரனுக்கு ரூ 120 உயர்ந்து ஒரு சவரன் 1,05,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 235 க்கும் பார் வெள்ளி 2,35,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User