நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை...!

இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.

Jul 28, 2026 - 10:30
0 386
நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை...!

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து  வந்த நிலையில் கடந்த வாரம் முழுவதுமே ஏற்றத்தை மட்டுமே சந்தித்து வந்தது. கடந்த வியாழக்கிழமை மட்டும் சவரனுக்கு ரூ 2,160 குறைந்த தங்கம் விலை அதன் பிறகு தொடர்ந்து ஏற்றத்தை மட்டும் சந்தித்து வந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று (27.7.2026) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,06,960க்கும்  கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,370க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் அதிரடியாக குறைந்து நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,240 குறைந்து ஒரு சவரன் ரூ 1,05,720க்கும் கிராமுக்கு ரூ 155 குறைந்து  ஒரு கிராம் ரூ 13,215க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 235க்கும்,ஒரு கிலோ வெள்ளி ரூ2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User