சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்… வெளியானது அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே டிரைலர்..! 

உலகளவில் வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்துக்குப் பிறகு, மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் கடந்த ஏழு ஆண்டுகளாக கட்டமைத்து வந்த மல்டிவெர்ஸ் கதைக்களத்தின் முக்கியமான அத்தியாயமாக உருவாகியுள்ள அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Jul 21, 2026 - 11:52
0 368
சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்… வெளியானது அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே டிரைலர்..! 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சினிமாகான் விழாவில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட டூம்ஸ் டே படத்தின் முன்னோட்டம் உலக அளவில் பயங்கர டிரெண்ட் ஆனது. காரணம், அயர்ன் மேனாக நடித்த டோனி ஸ்டார்க், டூம்ஸ் டேவாக மீண்டும் அவெஞ்சர்ஸ் யூனிவர்ஸிற்குள் வந்துள்ளார். அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் டோனி ஸ்டார்க் உயிரிழந்ததாகக் காட்டப்பட்ட நிலையில், இந்த முறை அவர் கதாநாயகனாக அல்லாமல், மல்டிவெர்ஸையே அழிக்கத் திட்டமிடும் கொடூரமான வில்லன் டாக்டர் டூமாக தோன்றுகிறார்.

இந்த நிலையில், அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டேவின் டிரைலர் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

இந்த டிரைலரில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மல்டிவெர்ஸை அச்சுறுத்தும் பேரழிவைத் தடுக்க, மார்வெல் பிரபஞ்சத்தின் பல்வேறு சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணையும் காட்சிகள், குறிப்பாக, எண்ட்கேம் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளியில் கிறிஸ் எவான்ஸ் மீண்டும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். தோர் மற்றும் கேப்டன் அமெரிக்கா மீண்டும் சந்திக்கும் தருணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

மேலும், எக்ஸ்-மென் அணியைச் சேர்ந்த ப்ரொஃபெசர் எக்ஸ், மேக்னடோ, சைக்ளோப்ஸ், கேம்பிட் ஆகியோரும் களமிறங்குகின்றனர். ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் குழுக்களும் அவர்களுடன் இணைந்து பேரழிவைத் தடுக்க போராடுகின்றன. அயர்ன் மேனாக உலகைக் காக்க போராடிய டோனி ஸ்டார்க், தற்போது மல்டிவெர்ஸை அழிக்கும் அரக்கனாக இருப்பது படத்தின்மீதான எதிர்ப்பார்ப்பை எகிறவிட்டுள்ளது. 

இன்பினிட்டி வார், எண்ட்கேம் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தையும் இயக்கியுள்ளனர். அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User