Thug Life: கமல், மணிரத்னம் ஆசையை நிறைவேற்றிய சிம்பு… பரபரக்கும் தக் லைஃப் ஷூட்டிங் ஸ்பாட்!

கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apr 18, 2024 - 17:39
0 331
Thug Life: கமல், மணிரத்னம் ஆசையை நிறைவேற்றிய சிம்பு… பரபரக்கும் தக் லைஃப் ஷூட்டிங் ஸ்பாட்!

சென்னை: வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படம் மூலம் செம்ம மாஸ்ஸாக கம்பேக் கொடுத்தார் சிம்பு. இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதனால் கோலிவுட்டில் மீண்டும் சிம்புவின் ஆட்டம் வெறித்தனமாக தொடங்கியது. இந்நிலையில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் தனது 48வது படத்தில் கமிட்டானார் சிம்பு. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் STR 48 என்ற டைட்டிலில் இந்தப் படம் பற்றிய அப்டேட் வெளியானது.  

இதற்காக தாய்லாந்து சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரெய்னிங் எடுத்த சிம்பு, கெட்டப்பை மாற்ற லண்டன் பறந்தார். மேலும், STR 48 பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும், சிம்பு இதில் இரண்டு கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ரோல்களில் ஒன்று திருநங்கை கெட்டப் என்பதும் குறிப்பிடத்தக்கது. STR 48 படம் பற்றிய அப்டேட்கள் பரபரப்பாக வெளியானாலும் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் மட்டும் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் ஷூட்டிங் தொடங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.  

இதனிடையே கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. நாயகனுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக், நாசர், அபிராமி ஆகியோரும் கமிட்டாகியுள்ளனர். ஆனால், துல்கர் சல்மானும் ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சினையால் தக் லைஃப் படத்தில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்பட்டது.  

அவர்களில் துல்கருக்குப் பதிலாக சிம்பு தக் லைஃப் படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இருவரும் மீண்டும் தக் லைஃப் படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அவர்களுடன் சிம்பு இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே வேகத்தில் தக் லைஃப் படப்பிடிப்பில் இணைந்துள்ளாராம் சிம்பு. அதன்படி ராஜஸ்தானில் நடைபெறும் தக் லைஃப் ஷூட்டிங்கில் சிம்பு சம்பந்தமான காட்சிகளை மணிரத்னம் இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது. STR 48 போல இதிலும் சிம்பு இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் இதுபற்றி முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User