Thangalaan: சீயான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்…. மிரட்டும் தங்கலான் ப்ரோமோ வீடியோ!

சீயான் விக்ரம் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து தங்கலான் படத்தில் இருந்து ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Apr 17, 2024 - 16:29
Updated: 2 years ago
0 288
Thangalaan: சீயான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்…. மிரட்டும் தங்கலான் ப்ரோமோ வீடியோ!

சென்னை: கோலிவுட்டின் வெரைட்டியான ஹீரோக்களில் ஒருவரான விக்ரம், தங்கலான், சீயான் 62 படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் பா ரஞ்சித் கூட்டணியில் தங்கலானில் இணைந்த விக்ரம், இந்தப் படத்திற்காக மிரட்டலான லுக்கில் நடித்துள்ளார். தங்கலான் அறிவிப்பு வெளியான நாள் முதலே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது.  

இந்நிலையில், இன்று விக்ரம் தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தங்கலான் படக்குழுவினரும் விக்ரமிற்கு வாழ்த்து சொல்லும் விதமாக தங்கலான் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. Tribute Video என்ற கேப்ஷனில் வெளியாகியுள்ள இந்த வீடியோ விக்ரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

டீசர் போல இல்லாமல், விக்ரம் ரிஸ்க் எடுத்த காட்சிகளின் மேக்கிங் வீடியோவாக இது வெளியாகியுள்ளது. படத்துக்குப் படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவது தான் விக்ரமின் வழக்கம். ஆனால், தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்க்கும் போது, இந்தப் படம் விக்ரமிற்கு பல விருதுகளை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தங்கலான் படத்தை ஆஸ்கர் மேடை வரை கொண்டு செல்வோம் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

தங்கலான் ப்ரோமோ வீடியோவைத் தொடர்ந்து சீயான் 62 அப்டேட்டும் இன்று வெளியாகிறது. இது சீயான் 62 டைட்டில் டீசராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் சீயான் பிறந்தநாள் ஸ்பெஷலாக மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் திரைப்படம் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User