Thangalaan: ஆகஸ்ட் ரிலீஸில் இருந்து பின்வாங்கும் புஷ்பா 2... உஷாரான தங்கலான் டீம்!

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 14, 2024 - 17:55
0 336
Thangalaan: ஆகஸ்ட் ரிலீஸில் இருந்து பின்வாங்கும் புஷ்பா 2... உஷாரான தங்கலான் டீம்!

சென்னை: விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ச்சியாக இந்த மாதம் இறுதியில் பிரபாஸின் கல்கி, அடுத்த மாதம் கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2, தனுஷின் ராயன் படங்கள் வெளியாகின்றன. இந்த வரிசையில், ரஜினியின் வேட்டையன், விஜய்யின் தி கோட், சூர்யாவின் கங்குவா, சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான், சிவகார்த்திகேயனின் அமரன், பாலா இயக்கியுள்ள வணங்கான் என கோலிவுட் டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. இதுவரை இல்லாத அளவில் 2024-ல் முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஒரே ஆண்டில் ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

அதேபோல், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் தேவாரா செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் என படக்குழு நேற்று அறிவித்தது. இதனால் தங்கலான், கங்குவா, வணங்கான், அமரன் போன்ற படங்களை எப்போது ரிலீஸ் செய்வது என தெரியாமல் அந்தந்த படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் 15 ரிலீஸில் இருந்து புஷ்பா 2 பின்வாங்கவுள்ளதாகத் தெரிகிறது. சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், இன்னும் முடிவுக்கு வரவில்லை.  

அதன்பின்னர் தான் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடைபெறும். இதனால் புஷ்பா 2ம் பாகத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. புஷ்பா 2 ஆகஸ்ட் 15 ரிலீஸில் இருந்து பின்வாங்கினால், அதே தேதியில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட ஸ்டூடியோ க்ரீன் முடிவு செய்துள்ளதாம். தனுஷின் ராயன் படம் வெளியாகும் என்ற நினைப்பில், ஜூன் மாதம் ரிலீஸில் இருந்து பின்வாங்கியது தங்கலான். அதனையடுத்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய சரியான தேதி கிடைக்காமல் திணறி வரும் படக்குழு, தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி மீது கண் வைத்துள்ளது.

அதேநேரம் தங்கலானுக்குப் போட்டியாக கார்த்தி நடித்துள்ள மெய்யழகன், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை அல்லது ப்ரதர், கவின் நடித்து வரும் பிளடி பெங்கர், அருண் விஜய் – பாலா கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் ஆகிய படங்களும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரலாம் எனவும், இதில் தங்கலான் தான் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸை உறுதி செய்யும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User