Thalaivar 171: மீண்டும் Vintage அவதாரம் எடுக்கும் ரஜினி… தலைவர் 171 டைட்டில் இதுதானா..?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் பற்றி தகவல் கிடைத்துள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி முதல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு தரமான சம்பவங்கள் காத்திருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் தான் அது. கார்த்தி, விஜய், கமல்ஹாசன் கூட்டணிகளில் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ், அடுத்து ரஜினியுடன் இணைந்துள்ளார். முதன்முறையாக இந்த மாஸ் காம்போவில் படம் உருவாகவுள்ளது செம்ம ஹைப் கொடுத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 171 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆகமொத்தம் ரஜினி, லோகேஷ், அனிருத், சன் பிக்சர்ஸ் என அதகளமான காம்போவில் தலைவர் 171 ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், வரும் 22ம் தேதி டைட்டில் டீசர் வெளியாகிறது. லோகேஷ் வழக்கம் போல டைட்டிலை அறிவித்துவிட்டு படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் தலைவர் 171 டைட்டில் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப் படத்திற்கு ‘கழுகு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 1981ம் ஆண்டு ரஜினி நடிப்பில் ரிலீஸான கழுகு திரைப்படம் வெற்றிப் பெற்றது. அதே டைட்டிலை தற்போது தலைவர் 171 படத்திற்கு வைக்க லோகேஷ் பிளான் செய்துள்ளாராம். இதனால் தலைவர் 171 படத்தில் ரஜினி வின்டேஜ் கெட்டப்பில் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தலைவர் 171 டைட்டில் டீசரின் அப்டேட் பற்றிய போஸ்டரில் ரஜினியின் கைகள் வாட்ச்களால் இணைக்கப்பட்டிருந்தன. இதனால் தலைவர் 171 ரோலக்ஸ் கேரக்டரின் ப்ரீக்வெல் மூவியாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பதை போல் இல்லாமல் தலைவர் 171 வேற லெவலில் இருக்கும் என லோகேஷ் கூறியிருந்தார். எனவே தலைவர் 171 டைட்டில் டீசர் முதல் படத்தின் ஒன்லைன் வரை அனைத்துமே அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)