Thalaivar 171: ரஜினியின் தலைவர் 171 Script Work இருக்கட்டும்… இந்த அப்டேட் என்னன்னு தெரியுமா..?

ரஜினியின் தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி லோகேஷ் அப்டேட் கொடுத்த நிலையில், இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.

Apr 04, 2024 - 23:23
0 226
Thalaivar 171: ரஜினியின் தலைவர் 171 Script Work இருக்கட்டும்… இந்த அப்டேட் என்னன்னு தெரியுமா..?

சென்னை: லியோவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் மூலம் ரஜினிகாந்த் – லோகேஷ் கூட்டணி முதன்முறையாக இணைகிறது. இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 

அதன்படி தலைவர் 171 படத்திற்கு ‘கழுகு’ என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யாத நிலையில், அருண் விஜய்யின் 36வது பட விழாவுக்கு சென்றிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதனை முடித்துவிட்டு கிளம்பிய லோகேஷிடம் தலைவர் 171 பற்றி செய்தியாளர்கள் அப்டேட் கேட்டனர். அதற்கு பதிலளித்த லோகேஷ், ஸ்க்ரிப்ட் ஒர்க் நல்லா போய்ட்டு இருக்கு என சிம்பிளாக கூறிவிட்டு எஸ்கேப் ஆனார். அதேநேரம் டைட்டில் டீசர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் எதுவும் தெரிவிக்கவில்லை.  

இந்நிலையில் தலைவர் 171 டைட்டில் டீசருக்கான ஷூட்டிங் அடுத்த வாரம் தான் நடைபெறவுள்ளதாம். ரஜினி பங்கேற்கும் இந்தப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் கெட்டப், ஹேர்ஸ்டைல், லுக் அனைத்தையும் போட்டோ ஷூட் செய்துவிட்ட லோகேஷ், ஒன்றிரண்டு நாட்களில் டைட்டில் டீசர் படப்பிடிப்பை முடித்துவிட பிளான் செய்துள்ளாராம். இதனால் லோகேஷ் அண்ட் டீம் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User