Pushpa 2: “அதிரடி தான் சரவெடி தான்..” வெளியானது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

May 01, 2024 - 23:32
0 502
Pushpa 2: “அதிரடி தான் சரவெடி தான்..” வெளியானது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: டோலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் புஷ்பா 2ம் பாகம் ஆகஸ்ட் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸின் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புஷ்பா 2 படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு இறுதியில் வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. அப்போதே புஷ்பா 2ம் பாகத்துக்கு தரமான லீட் கொடுத்திருந்தார் இயக்குநர் சுகுமார்.    

கடந்த இரண்டு ஆண்டுகளாக புஷ்பா 2ம் பாகம் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் புஷ்பா 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சுகுமார். முதல் பாகத்தை விட புஷ்பா 2-வில் ஆக்‌ஷன் அதிரடிகளுக்கு பஞ்சமிருக்காது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக டீசர் வெளியிட்டு சர்ப்ரைஸ் காட்டியது படக்குழு. அதன் தொடர்ச்சியாக புஷ்பா 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ”புஷ்பா புஷ்பா” என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ் பாடல் வரிகளை விவேகா எழுத, நகாஷ் அஜீஸ், தீபக் ப்ளூ இருவரும் இணைந்து பாடியுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் வழக்கம் போல தனது மிரட்டலான இசையால் ‘புஷ்பா புஷ்பா’ பாடலை கம்போஸ் செய்துள்ளார். முக்கியமாக பாடல் வரிகள் முழுவதும் அல்லு அர்ஜுனின் ஹீரோயிசத்துக்கு செம்ம பில்டப் கொடுத்துள்ளது. கடந்த இரு தினங்களாக புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு தாறுமாறான ப்ரோமோஷன் செய்து வந்தது படக்குழு.   

அதனால், தற்போது வெளியான புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இது அல்லு அர்ஜுனின் இன்ட்ரோ சாங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், முதல் பாகத்தை போலவே புஷ்பா 2-விலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் சம்பவம் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User