ஒரே கல்லினால் ஆன ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் – பிரம்மிக்க வைக்கும் சிவலிங்க ஆலயம்!

பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Feb 26, 2024 - 13:33
0 490
ஒரே கல்லினால் ஆன ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் – பிரம்மிக்க வைக்கும் சிவலிங்க ஆலயம்!

ஈரோட்டில் உள்ள ஒரு சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லினால் ஆன ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. 

ஈரோடு சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில், ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதன்படி தற்போது கோயில் வளாகத்தில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

இங்கு ஏற்கனவே சிவனடியார்கள் கொடுத்த ஏராளமான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரே கல்லினால் ஆன 8 டன் எடை மற்றும் 12 அடி உயரம் உடைய ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் கொண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக கிரேன் மூலம் சிவலிங்கத்தின் பீடம் மற்றும் லிங்கம் நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User