Nayan Samantha: போட்டிப் போட்டு சொக்க வைக்கும் நயன்தாரா, சமந்தா… உங்க ஃபேவரைட் கதீஜாவா… கண்மணியா..?

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்த நடித்திருந்த நயன்தாராவும் சமந்தாவும் ஒரேநேரத்தில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளனர்.

Apr 26, 2024 - 17:10
0 480
Nayan Samantha: போட்டிப் போட்டு சொக்க வைக்கும் நயன்தாரா, சமந்தா… உங்க ஃபேவரைட் கதீஜாவா… கண்மணியா..?

சென்னை: கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றால், சமந்தாவோ பான் இந்தியா ஸ்டாராக மிரட்டி வருகிறார். இருவருமே தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர். இருவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடித்ததை ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்தப் படம் 2022ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியாகியிருந்தது. 

காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஸ்பாட்டிலும், இப்படத்தின் டப்பிங் பணியின் போதும் நயன்தாரா, சமந்தா இருவரும் செம்ம ஃப்ரெண்ட்லியாக மஜா செய்தனர். ஒருகட்டத்தில் சமந்தா தனது எமோஷனலை கட்டுப்படுத்த முடியாமல் அழுத போது, அவரை அரவணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார் நயன். இந்த வீடியோ வைரலாக இருவரது நட்பையும் பார்த்து ரசிகர்களே திகைத்துவிட்டனர். அதன் பின்னர் நயன், சமந்தா இருவரும் அவரவர் கமிட்டான படங்களில் பிஸியாகிவிட இப்போது மீண்டும் ஒன்றாக களமிறங்கியுள்ளனர்.

அதாவது ஒரேநேரத்தில் ஒரே கலரில் ஹாட்டான போட்டோஸ் ஷேர் செய்து வெள்ளிக்கிழமை வைப் கொடுத்துள்ளனர். அதாவது சினிமா விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, கறுப்பு நிற கிளாமர் உடையில் ரசிகர்களை சூடேற்றியுள்ளார். நயனின் இந்த கெட்டப் அவரது பில்லா படத்தின் பிகினி சீனை நியாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், சமந்தாவும் கறுப்பு நிற உடையில் கிளாமரில் கிறங்கடித்துள்ளார்.  

இந்த புகைப்படங்களில் நயனை விட இன்னும் ஒருபடி உச்சம் சென்றுள்ளார் சமந்தா. பின்னல் நிறைந்த மேலாடை, ஒய்யார உடல் மொழி என நளினமாக கிக் ஏற்றும் சமந்தாவின் லுக்கை பார்த்து, கிக் ஏறியடி ஆகாயத்தில் மிதக்கின்றனர் ரசிகர்கள். சமீபத்தில் உள்ளாடையுடன் அருவியில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு சிலிர்க்க வைத்த சமந்தா, இப்போது இன்னும் வித்தியாசமாக களமிறங்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த வாரம் வெள்ளிக் கிழமை ரசிகர்களுக்கு ஹாட் வைப் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User