இசையமைப்பாளர் இளையராஜா 83-வது பிறந்தநாள்: ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து 

83வது பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மநீம கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Jun 02, 2026 - 10:23
0 290
இசையமைப்பாளர் இளையராஜா 83-வது பிறந்தநாள்: ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து 
இசையமைப்பாளர் இளையராஜா 83-வது பிறந்தநாள்

இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள், ''நலம் வாழ எந்நாளும்.. என் வாழ்த்துகள்.. தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்'' என்ற பாடல் பாடி இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்; இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.

மநீம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.என பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User