Jason Sanjay: வாரிசுகளின் கூட்டணியில் ஜேசன் சஞ்சய் முதல் படம்..? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராசா!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mar 07, 2024 - 23:24
0 298
Jason Sanjay: வாரிசுகளின் கூட்டணியில் ஜேசன் சஞ்சய் முதல் படம்..? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராசா!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்பா வழியில் ஹீரோவாக முயற்சிக்காமல், தாத்தா எஸ்.ஏ சந்திரசேகரனைப் போல இயக்குநராகவுள்ளார். அதன்படி சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது பற்றி அதிகாரப்பூர்வமாகவே அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை இந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன்ஸ் டீம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.  

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதாவது சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாகவும், இயக்குநர் சங்கரின் மகள் அதிதி நாயகியாகவும், ஏஆர் ரஹ்மான் மகன் ஏஆர் அமீன் இசையமைப்பாளராகவும் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் சஞ்சய்யின் முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.  

ஆனால், இதுபற்றி லைகா தரப்பில் இருந்து நோ என்ற சிக்னல் தான் கிடைத்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரர் மணத்தி கணேசனின் பயோபிக்கில் நடிக்க கமிட்டாகியுள்ளார் துருவ் விக்ரம். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், இது முடியவே ஓராண்டுக்கும் மேல் ஆகும் என சொல்லப்படுகிறது. இதனால் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ துருவ் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.  

அதேபோல், அதிதி ஷங்கர், ஏஆர் அமீன் ஆகியோரும் இந்தப் படத்தில் கமிட்டாகவில்லையாம். சஞ்சய்யின் முதல் சாய்ஸ் விஜய் சேதுபதி தான் என்றும், அவர் இல்லையென்றால் துல்கர் சல்மானை நடிக்க வைக்கலாம் எனவும் அவர் முடிவு செய்துவிட்டாராம். பட்ஜெட் பிரச்சினை காரணமாக லைகா தரப்பில் இருந்து விஜய் சேதுபதியை இன்னும் கமிட் செய்யவில்லை என்றும், விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User