Indian Re-Release: ரீ-ரிலீஸான இந்தியன்... தெறிக்கவிடும் கமல் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் வீடியோ!

இந்தியன் திரைப்படம் இன்று ரீ-ரிலீஸான நிலையில், கமல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Jun 07, 2024 - 17:25
0 564
Indian Re-Release: ரீ-ரிலீஸான இந்தியன்... தெறிக்கவிடும் கமல் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் நடைபெற்றது. அதேபோல், இந்தியன் 2 படத்தில் இருந்து பாடல்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது படக்குழு. இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், ‘கதறல்ஸ்’ என்ற மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸாகிறது. அதேபோல் அடுத்தடுத்த நாட்களில் இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதன் இன்னொரு பகுதியாக, இந்தியன் திரைப்படம் ரீ-ரிலீஸாகலாம் என சொல்லப்பட்டது. கமல் – ஷங்கர் கூட்டணி முதன்முறையாக இணைந்த இந்தியன் திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியானது. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். சந்துரு, இந்தியன் தாத்தா என நடிப்பில் கமல் மிரட்ட, பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றில் அதகளம் செய்திருந்தார் ஏஆர் ரஹ்மான். அதேபோல், இந்தியன் படத்தில் ஷங்கரின் மேக்கிங் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. கமல், ஷங்கர், ஏஆர் ரஹ்மான் என மூவரின் கேரியரிலும் இந்தியன் திரைப்படம் மாஸ் சம்பவமாக அமைந்தது.

இதன் இரண்டாம் பாகமாக தான் தற்போது இந்தியன் 2 உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தியன் திரைப்படம் இன்று சென்னை கமலா திரையரங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழில் பழைய சூப்பர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸாகி வருகின்றன. அந்த வரிசையில் இன்று இந்தியன் முதல் பாகம் மீண்டும் வெளியாக, அதனை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டர் முன் குத்தாட்டம் போட்டு வைப் கொடுத்த ரசிகர்கள், படம் தொடங்கியதும் இந்தியன் தாத்தா கமல் என்ட்ரியாகும் காட்சியில், புஷ்வானம் வெடித்து கொண்டாடியுள்ளனர்.

தியேட்டர் உள்ளே பட்டாசு கொளுத்தும் வழக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், இந்தியன் ரீ-ரிலீஸை புஷ்வானம் கொளுத்தி வைப் செய்துள்ளனர் ரசிகர்கள். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்னொரு பக்கம் இந்தியன் படத்தில் ஏஆர் ரஹ்மானின் இசை தரமாக இருக்கிறது எனவும், ஆனால், இந்தியன் 2ம் பாகத்தில் அனிருத் ஏமாற்றிவிட்டதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்தியன் ரீ ரிலீஸாகியுள்ளதால், இசை ரசிகர்களின் கதறல்களும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.  

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User