Good Bad Ugly: அஜித் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி... குட் பேட் அக்லி அதிரடி அப்டேட்!

அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது அப்டேட் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

Jun 27, 2024 - 17:46
0 331
Good Bad Ugly: அஜித் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி... குட் பேட் அக்லி அதிரடி அப்டேட்!

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனால் சில நாட்கள் பொறுத்துப் பார்த்த அஜித், குட் பேட் அக்லி படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். அதன்படி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி ஷூட்டிங் இரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லி ஷூட்டிங் தொடங்கியதும் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதில், அஜித் மூன்று கெட்டப்பில் நடிப்பது பற்றியும் படக்குழு லீட் கொடுத்திருந்தது. அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் ஒன்று ரெடியாகிவிட்டது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ, செகண்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகின. அதே தினத்தில் அஜித் துபாயில் ரேஸ் கார் ஓட்டிய வீடியோ திடீரென ட்ரெண்டானது. இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதை அறிவிக்கும் விதமாக, தரமான வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்தது. 

விடாமுயற்சி மேக்கிங் வீடியோவான அதில், அஜித்தும் ஆரவும் காரின் உள்ளே இருக்க, இருவரையும் அந்தரத்தில் பறக்கவிட்டு ஜெர்க் கொடுத்திருந்தார் இயக்குநர் மகிழ் திருமேனி. அடுத்தடுத்து அஜித்தின் வீடியோக்கள் வெளியானதால் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தார். அதே வேகத்தில் தற்போது குட் பேட் அக்லி செகண்ட் அப்டேட் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 6.40 மணிக்கு குட் பேட் அக்லி படத்தில் இருந்து செகண்ட் லுக் போஸ்டர் அல்லது டைட்டில் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பிறந்தநாளில் கோட் அப்டேட்ஸ் வெளியாகும் போது அதனை டார்க்கெட் செய்தே அஜித்தின் கார் ரேஸ் வீடியோக்கள் வெளியானதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், நேற்று கூலி படத்தின் ஷூட்டிங் அப்டேட் கொடுத்த லோகேஷ், ரஜினிக்கு ஹேர் ஸ்டைலிஷ் செய்த போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்குப் போட்டியாக தான் அஜித்தின் குட் பேட் அக்லி அப்டேட் வெளியாகிறதா எனவும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இதனிடையே குட் பேட் அக்லி அப்டேட் இன்று மாலை வெளியாகவிருப்பதால், அஜித் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதேபோல், சீக்கிரம் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்தால் நன்றாக இருக்கும் எனவும் அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User