Chiyaan 62: வீர தீர சூரனாக விக்ரம்… மிரட்டலாக வெளியானது சீயான் 62 டைட்டில் டீசர்

சீயான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தில் இருந்து மேக்கிங் கிளிம்ப்ஸ் வெளியானது. அதனைத் தொடர்ந்து சீயான் 62 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Apr 17, 2024 - 23:51
Updated: 2 years ago
0 311
Chiyaan 62: வீர தீர சூரனாக விக்ரம்… மிரட்டலாக வெளியானது சீயான் 62 டைட்டில் டீசர்

சென்னை: சீயான் விக்ரம் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், சீயான் ரசிகர்களுக்காக ஸ்பெஷலான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்தது தங்கலான் படக்குழு. பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் கேஜிஎஃப்-ஐ பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. தங்கலான் வைப் அடங்கும் முன்னரே அடுத்த அப்டேட் கொடுத்து அதிரடி காட்டியுள்ளார் விக்ரம்.  

தங்கலான் படத்தைத் தொடர்ந்து சீயான் 62-ல் கமிட்டானார் விக்ரம். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்கள் மூலம் பிரபலமான சு அருண்குமார் சீயான் 62 படத்தை இயக்குகிறார். விக்ரம் உடன் எஸ்ஜே சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் அபிஸியல் அப்டேட்டை மிரட்டலான மினி கிளிம்ப்ஸாக வெளியிட்டு மாஸ் காட்டியது படக்குழு.  

இதன் தொடர்ச்சியாக தற்போது விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக சீயான் 62 டைட்டில் டீசர் ரிலீஸாகியுள்ளது. எதிர்பார்த்தை போல தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக வெளியான இந்த டீசர் மூலம் சீயான் 62 டைட்டில் வீர தீர சூரன் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் படமும் முழுக்க முழுக்க பக்கா கமர்சியலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதேபோல், அதேபோல், இப்படத்தில் சீயான் விக்ரமின் கேரக்டர் பெயர் காளி என்பதையும் படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த டீசர் பாகம் 2 என்ற அறிவிப்பும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தற்போது வெளியான வீர தீர சூரன் டைட்டில் டீசர் 2ம் பாகம் என்றால், இப்படத்தின் முதல் பாகம் எது என்பது தான். இருந்தாலும் வீர தீர சூரன் சீயான் விக்ரம் கேரியரில் தாறுமாறான சம்பவமாக இருக்கும் என்பது கன்ஃபார்ம். இந்த டீசரில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User