Ajith: விஜய்யின் கோட் கிளிம்ப்ஸ்க்கு போட்டியா..? ட்ரெண்டாகும் அஜித்தின் கார் ரேஸ் வீடியோ..?

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக தி கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான நிலையில், இன்னொரு பக்கம் அஜித் ரேஸ் கார் ஓட்டும் வீடியோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Jun 22, 2024 - 17:24
Updated: 2 years ago
0 291
Ajith: விஜய்யின் கோட் கிளிம்ப்ஸ்க்கு போட்டியா..? ட்ரெண்டாகும் அஜித்தின் கார் ரேஸ் வீடியோ..?

சென்னை: விடாமுயற்சி, குட் பேட் அக்லி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல், விடாமுயற்சி திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடமுயற்சி ரிலீஸ் பற்றி விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஸரான அஜித், கடந்த சில மாதங்களாக தனது குழுவினருடன் பைக் டூர் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அஜித் பைக் டூர் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகின. அப்போது அவர் தனது குழுவினருக்கு பிரியாணி சமைத்து ட்ரீட்டும் வைத்தார். ஆனால், குட் பேட் அக்லி படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் அஜித் பைக் டூர் செல்லவில்லை. அதேநேரம் மீண்டும் தொடங்கவுள்ள விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் செல்லவுள்ளார். இந்த நிலையில் தான் அஜித் ரேஸ் கார் டிரைவ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பக்கா ரேஸர் லுக்கில் செம்ம மாஸ்ஸாக காற்றைக் கிழித்துக்கொண்டபடி கார் டிரைவ் செய்து அசத்தியுள்ளார் அஜித். இந்த காரின் ஸ்டேரிங் இடது பக்கமாக இருப்பதால், அஜித் வெளிநாட்டில் இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதேபோல், ரேஸருக்கான பிரத்யேகமான உடையில் ஸ்டைலிஷாக அஜித் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, கோட் படத்தில் இருந்து ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அஜித்தின் வீடியோவும் ட்ரெண்டாகி வருவதால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

தி கோட் கிளிம்ப்ஸ்க்குப் போட்டியாக அஜித் ரேஸ் கார் டிரைவ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளதாக விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி வைரலானது. அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடினாலும், விஜய் ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமக அஜித்தின் ரேஸ் கார் வீடியோ வெளியாகியுள்ளதா எனவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User