Ajith AK 64: மங்காத்தா விநாயக் Vibe... AK 64-க்கு ரெடியான அஜித்... சிவா சம்பவம் லோடிங்!

அஜித்தின் ஏகே 64 இயக்குநராக சிறுத்தை சிவா கமிட்டாகியுள்ளதாகவும், இந்தப் படத்தின் ஒன்லைன் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 01, 2024 - 23:55
0 542
Ajith AK 64: மங்காத்தா விநாயக் Vibe... AK 64-க்கு ரெடியான அஜித்... சிவா சம்பவம் லோடிங்!

சென்னை: அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. முன்னதாக அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித்தின் 64வது திரைப்படம் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி ஏகே 64 இயக்குநராக சிறுத்தை சிவா கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் – சிவா கூட்டணி 
அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. தற்போது சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கியுள்ள சிவா, அடுத்து அஜித்துக்காக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்துள்ளாராம். இதற்கு அஜித்தும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கங்குவா ரிலீஸானதும் உடனடியாக ஏகே 64 ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்கவுள்ளாராம் சிவா. இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் பற்றியும் செம்ம எக்ஸ்ளூசிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மங்காத்தா Vibe-ல் அஜித் 
ஏகே 64 படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. வாலி, மங்காத்தா படங்களைப் போல செம்ம பவர்ஃபுல்லான வில்லன் கேரக்டரில் அஜித் நடிப்பதாகவும், ஹீரோவாக பாலிவுட்டில் இருந்து முன்னணி நடிகரை களமிறக்க சிவா முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. விஸ்வாசம் படத்தின் போதே ஏகே 64 கதை குறித்து அஜித்தும் சிவாவும் ஆலோசனை செய்திருந்ததாகவும், தற்போது அதனை படமாக எடுக்க பிளான் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் ஏகே 64 அப்டேட் 
இதனால் விரைவில் அஜித்தின் ஏகே 64 படம் குறித்து அபிஸியலாக அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. அதேபோல் விடாமுயற்சியும் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஏகே 64 படப்பிடிப்பை 2025 ஆரம்பத்தில் தொடங்கிவிடலாம் என சிவாவுக்கு அஜித் சிக்னல் கொடுத்துள்ளதாராம்.     

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User