ஆம்பூரில் போலீசிடம் அலம்பல் செய்த போதை பார்ட்டி.. காப்பு போட்ட இன்ஸ்பெக்டர்

May 11, 2024 - 22:09
0 258
ஆம்பூரில் போலீசிடம் அலம்பல் செய்த போதை பார்ட்டி.. காப்பு போட்ட இன்ஸ்பெக்டர்

ஆம்பூர் அருகே மதுபோதையில் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்த அப்பு (34), சஞ்சய் (24) ஆகியோர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அப்பகுதியில் சுற்றித் திரிந்துகொண்டு பொமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து இருவரையும் பிடித்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் விசாரணை நடத்தினார். அப்போது மதுபோதையில் இருந்து 2 பேரும், காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அப்பு, சஞ்சய் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரும் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆம்பூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User