“நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்”  மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு 

“வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Dec 08, 2025 - 12:57
0 233
“நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்”  மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு 
Stalin orders district secretaries

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.இதன் தொடர்ச்சியாக திமுகதலைவருமான முதல்வருமான ஸ்டாலின் இன்று காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

 “வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும் நாம் இன்னும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். SIR பணிகளில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்திருந்தாலும், இன்னும் பாதி கிணற்றையே தாண்டியிருக்கிறோம். இனி வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றுவதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தங்கள் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிசெய்தல், போலி வாக்காளர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். கடந்த முறை போலவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக முகாம்கள் அமைத்து, தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,"இவ்வாறு ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User