“லேடீஸ்க்கு ஹாப்பி நியூஸ்” தங்கம் விலை சவரனுக்கு ரூ.3200 குறைவு 

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3200 குறைந்து இருப்பது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Jun 10, 2026 - 10:09
0 400
“லேடீஸ்க்கு ஹாப்பி நியூஸ்” தங்கம் விலை சவரனுக்கு ரூ.3200 குறைவு 
தங்கம் விலை சவரனுக்கு ரூ.3200 குறைவு 

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தறுமாறாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆவதால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நேற்றைய  தினம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு தினங்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல், ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ. 1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 13,800 விற்பனையாகிறது. இதே போன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User