வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேமுதிக.. விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி...

Mar 22, 2024 - 21:40
0 169
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேமுதிக.. விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளும்,  தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி தென்காசியில் புதிய தமிழகம் கட்சியும், திண்டுக்கலில் எஸ்டிபிஐ கட்சியும் களமிறக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளும், அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களையும் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரமலதா அறிவித்துள்ளார். 

அதன்படி,

1. மத்திய சென்னை  - பார்த்தசாரதி
2. திருவள்ளூர்              - நல்லதம்பி
3. கடலூர்                       - சிவக்கொழுந்து    
4. தஞ்சாவூர்                  - சிவநேசன்
5.விருதுநகர்                 - விஜய பிரபாகர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User