மேகதாது சர்ச்சை... காங்கிரஸை கைக்கழுவும் விஜய்? 

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து ஒத்துழைப்பு தராமல் தவெக அரசை புறக்கணிப்பதால், அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை தூக்கி எறிய முதலமைச்சர் விஜய் முடிவெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Aug 03, 2026 - 15:07
Updated: 15 days ago
0 325
மேகதாது சர்ச்சை... காங்கிரஸை கைக்கழுவும் விஜய்? 

ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவையில் முதல்முறையாக பெரிய மாற்றத்தைச் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்தவகையில், காங்கிரஸைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உட்பட, தற்போதைய அமைச்சர்கள் 4 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், குறைந்தது 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் கோட்டை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. 

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், கர்நாடகவில் காங்கிரஸே ஆளுங்கட்சியாக இருப்பதால் அவர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு சுமூகமான முடிவை கொண்டு வர முதலமைச்சர் விஜய் நினைத்தாராம். ஆனால், கர்நாடகாவிற்கு விஜய் வரவேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.எஸ் சொல்லிவிட்டதோடு, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுலும் முதலமைச்சர் விஜயை சந்திக்காமல் புறக்கணித்துவிட்டதால் முதலமைச்சர் விஜய் கடும்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பொறுத்தது போதும் இனி பேச்சு இல்லை வீச்சிதான் என்று ஆக்ஷனில் இறங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். 

அதாவது, எங்களுக்கு தண்ணீர் தர மனமில்லாத காங்கிரஸிற்கு எதற்கு அமைச்சரவையில் மட்டும் இடம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சரை மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவிகளின் கால்களைத் தொட்டது தொடர்பான சர்ச்சை அண்மையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுவே தவெக அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருந்தது. இத்தகையச் சூழலில், காவிரி பிரச்னை தவெக அரசின் கழுத்தை நெருக்கிக் கொண்டிருப்பதால் அதிரடி ஆக்‌ஷன் எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User