ஜனநாயகனுக்காக மேகதாதுவை விட்டுக்கொடுத்தாரா விஜய்? கொளுத்தி போட்ட உதய்....!

கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக மேகதாது அணையை கட்டும் முயற்சி உள்ளதால் இந்த முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Jul 28, 2026 - 14:43
0 246
ஜனநாயகனுக்காக  மேகதாதுவை விட்டுக்கொடுத்தாரா விஜய்?  கொளுத்தி போட்ட உதய்....!
Udhayanidhi Stalin

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு  தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி கூறியிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.  இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User