ஸ்டாலினைக் கிண்டல் செய்த தவெக எம்எல்ஏ… கொதித்தெழுந்த சபாநாயகர் !

தவெக எம்எல்ஏவுக்கு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என்றும் கண்ணியத்தை கவுரவத்தை காப்பாற்றுங்கள் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Aug 11, 2026 - 19:26
0 314
ஸ்டாலினைக் கிண்டல் செய்த தவெக எம்எல்ஏ… கொதித்தெழுந்த சபாநாயகர் !

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமும், மத்திய அரசின் FCRA திருத்த மசோதாவுக்கும் எதிராக தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்  சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார் பேசும்போது முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் மனதில் இருந்திருந்தால் அவர் சட்டசபைக்குள் வந்திருக்கலாம் என்று மு.க ஸ்டாலினின் தோல்வி குறித்து பேசியது திமுக மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உடனே கோபமடைந்த எம்.ஆர்.பன்னீர்செல்வம் "சுகுமார் எம்எல்ஏவுக்கு கடந்த ஆட்சியில் தான் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியுடன் இருந்தார்.அதனைத் தொடர்ந்து எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் 1.31. கோடி மக்களின் மனதிலும் குடியிருக்கிறார்" என தக்க பதிலடியை கொடுத்தார்.

வாக்குவாதங்கள் அதிகமான நிலையில் அதனை தடுக்கும் விதாமாக சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர், இரு தரப்பையும் அமைதிப்படுத்திவிட்டு தவெக எம்எல்ஏ சுகுமாரை நோக்கி "எப்போதும் சட்டசபையில் பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்த்துவிட வேண்டும். நீங்கள் மிகப் பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். அந்த கண்ணியத்தையும் கவுரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்" என கண்டித்தார்.

இதற்கு முன்னால் நடந்த சட்டசபையின் போது குட்டி ஸ்டோரி மூலம் ஸ்டாலினின் கொளத்தூர் தோல்வி குறித்து முதலமைச்சர் விஜய் கேலி செய்து பேசினார்.  அப்போது அவர் கதையில் பெரியவர் ஒருவரிடம் குட்டி பையன், என்ன தேடுகிறீர்கள் என கேட்டதற்கு, அந்த பெரியவர், "இல்ல உங்கப்பாவை காணோம், அதான் தேடுகிறேன்" என தெரிவித்திருந்தார். இது திமுக மற்றும் அனைவரும் மத்தியிலும் கண்டனம் எழுந்தது.

"அரசியலில் இத்தெல்லாம் சாதாரணம்ப்பா" என்ற கவுண்டமணியின் டைலாக் போல தான் அரசியலில் வெற்றி தோல்வி என்பது. ஆனால் தோல்வி குறித்து கிண்டல்களை தவிர்ப்பது நல்லது என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User