எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பாமக எம்.எல்.ஏ... கூட்டணியை உறுதி செய்யும் பேச்சுவார்த்தையா..?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அவருடைய இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்துப் பேசியுள்ளார்.

Mar 17, 2024 - 23:21
0 183
எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பாமக எம்.எல்.ஏ... கூட்டணியை உறுதி செய்யும் பேச்சுவார்த்தையா..?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அவருடைய இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்துப் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. பாமக, தேமுதிக என சில கட்சிகள் மட்டும், இன்றுவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (17.03.2024) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில், பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்துப் பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் தூதுவராக எம்.எல்.ஏ. அருள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், அதிமுக- பாமக கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User