'Blast Blast' 'Waste Waste' ...தவெக பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து..!

தமிழ்நாடு பட்ஜெட் 2026-ஐ வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Aug 05, 2026 - 17:23
0 218
'Blast Blast'  'Waste Waste' ...தவெக பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து..!

தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு இன்று தாக்கல் செய்தது. தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலையை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து சில கட்சிகள் அதிருப்தியும், சில கட்சிகள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!

அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget! மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்! அதுமட்டுமல்ல, - ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, - வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், - ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், - முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்! மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத - சொன்னதையும் செய்யாத - சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User