டெல்லி நீட் போராட்டத்தில் தடியடி... திமுக, கனிமொழி கடும் கண்டனம்!

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக மற்றும் கனிமொழியும் எக்ஸ் தள பதிவில் கடும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளது.

Jul 20, 2026 - 16:45
0 208
டெல்லி நீட் போராட்டத்தில் தடியடி... திமுக, கனிமொழி கடும் கண்டனம்!

நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் காலமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதலைக் காவல்துறை மூலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அமைதியான அறவழியில் போராடியவர்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஏவி விட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்காக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது.

தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு.

கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!

சி.ஜே.பி. (CJP) ஏற்பாடு செய்த நாடாளுமன்ற பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது,

நமது கல்வி முறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, ஒன்றிய பா.ஜ.க. அரசு உரையாடலைத் தவிர்த்து அடக்குமுறையையும் பலப்பிரயோகத்தையும் தேர்வு செய்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User