தஞ்சையில் அலங்கார பந்தல் அமைக்கும் பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீவிபத்து...

தஞ்சையில் பந்தல் அமைக்கும் அலங்கார துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து தீக்கிரையானது.

Mar 12, 2024 - 16:51
0 316
தஞ்சையில் அலங்கார பந்தல் அமைக்கும் பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீவிபத்து...

தஞ்சையில் பந்தல் அமைக்கும் அலங்கார துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து தீக்கிரையானது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் சண்முகா நகரில், திருமணம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட  நிகழ்ச்சிகளுக்கு அலங்கார பந்தல் அமைக்கும் தனியார் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. அங்கு பந்தல் போடுவதற்கான துணிகள், நைலான் பொருட்கள் போன்றவற்றை வைத்திருந்தார்கள்.

கிடங்கிற்குள் யாரும் இல்லாதபோது அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு கொடுத்த தகவலையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User